நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்திய இந்த நேரத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஓய்வின்றி பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், ஓய்வில்லாமல் பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
போலீஸுக்கு சல்யூட் அடித்த விஷ்ணு விஷால் - காவல்துறையினருக்கு சல்யூட் அடித்த விஷ்ணு விஷால்
கரோனா தொற்று பரவிவரும் அபாயகரமான சூழ்நிலையில் பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா உலகத்தையே மாற்றியுள்ளது. நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் பலரும் குடும்பத்தை பிரிந்து கரோனா தடுப்புக்காக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர். நான் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். என் தந்தை காவல்துறையில் 35 வருடங்களாக சேவையாற்றிவருகிறார். வர்தா புயல், சுனாமி, சென்னை வெள்ளம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் என் தந்தை பணியாற்றியுள்ளார். இதுபோன்று தற்போது பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன், அவர்கள் குடும்பங்களின் இந்த தியாகத்தை எங்களால் மறக்கமுடியாது. பல காவல்துறையினர் இந்த நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய நான் வேண்டுகிறேன். கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க...காதலி எடுத்த புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக மாற்றிய விஷ்ணு விஷால்!