'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் விஷ்ணு விஷால். அதன்பிறகு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'முண்டாசுப்பட்டி', 'மாவீரன் கிட்டு', 'ராட்சசன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் 'எப்ஐஆர்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படப்பிடிப்பு நிறைவு! - fir movie shoot wrapped up
விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடித்துள்ள 'எப்ஐஆர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன. 31) நிறைவடைந்தது. இதனை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இறுதி நாள் படப்பிடிப்பன்று தனது மகன் ஆர்யன்ஸ் பிறந்தநாளையும் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதையும் படிங்க... ஓடிடியில் வெளியாகும் ஜகமே தந்திரம்?