நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், இயக்குநர் கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் (எ) FIR'. இப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.
ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் FIR - விஷ்ணு விஷாலின் படங்கள்
விஷ்ணு விஷால் - கெளதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள FIR திரைப்படம், நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் ஏற்கனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள், படத்தொகுப்பு என அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வெளியீட்டிற்காக இப்படம் காத்திருந்தது. கடந்த ஆண்டு FIR படம் வெளியிடப்படவிருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.