தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’கங்கனா பகத் சிங் செய்ததற்கு ஒப்பான காரியத்தை செய்துள்ளார்' - விஷால் புகழாரம்! - கங்கனா ரனாவத்திற்கு விஷால் ஆதரவு

சென்னை : நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

By

Published : Sep 10, 2020, 11:01 PM IST

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரா அரசிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சில நாள்களுக்கு முன் மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த காஷ்மீர் போல் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார். கங்கனாவின் இந்தக் கருத்திற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

மேலும், மும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவில் உள்ள 'மணிகர்னிகா பிலிம்ஸ்' அலுவலகப் பகுதி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மும்பை மாநகராட்சி செப்டம்பர் 8ஆம் தேதி இடித்தது.

அதுமட்டுமல்லாது கங்கனா இனி மும்பைக்கு வர வேண்டாம் எனவும் பல கட்சியினரும் தெரிவித்தனர். இதற்கிடையில் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் நேற்று (செப்.9) மும்பை திரும்பினார்.

தற்போது கங்கனாவின் இந்த செயலுக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "அன்பார்ந்த கங்கனா, உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். எது சரி, எது தவறு என்பது குறித்து குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும் அரசின் எதிர்ப்பைத் சம்பாதித்துக்கொண்டு வலிமையாக இருக்கிறீர்கள். இது உங்களை மிகப்பெரிய ஒரு உதாரணமாக்குகிறது.

நீங்கள் இப்போது செய்திருக்கும் இந்தக் காரியம் 1920களில் பகத் சிங் செய்ததற்கு ஒப்பானது. பிரபலமாக இருந்தால் மட்டும் அல்ல, சாதாரண மனிதன் கூட ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராக பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details