தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இருளின் கடவுள்: 3டி தொழில்நுட்பத்தில் கிச்சா சுதீப்

3டி தொழில்நுட்பத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் "விக்ராந்த் ரோணா" படம் விரைவில் திரைக்கு வருகிறது.

By

Published : Sep 4, 2021, 10:50 PM IST

Kichcha Sudeep
Kichcha Sudeep

சென்னை : பொதுமுடக்கத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் கிச்சா சுதீப் நடிக்கும் "விக்ராந்த் ரோணா" படம் விரைவில் திரைக்கு வருகிறது.
படக்குழுவிடமிருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சுதீப்பின் பிறந்தநாள் அன்று படக்குழு வெளியிட்ட முன்னோட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ராந்த் ரோணா படத்தின் ஒருகாட்சி
கிச்சா சுதீப், ஸ்டைல் மற்றும் மாஸ் நிறைந்த காட்சிகள் மூலம் விக்ராந்த் ரோணா “ இருளின் கடவுள்” என கதை சொல்லப்படுகிறது.
‘The Deadman’s Anthem’ எனப் பொருத்தமான பெயருடன் வெளியான முன்னோட்டம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இது குறித்து திரைபடத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறுகையில், “விக்ராந்த் ரோணாவின் ‘Deadman’s Anthem’ முன்னோட்டத்தின் மூலம், கிச்சா சுதீப் பிறந்த நாளை கொண்டாடியதில், எங்களுக்கு பெருமகிழ்ச்சி.

விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம் என்பது முன்னோட்டத்தின் வாயிலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்தத் திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் சுதீப் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்றார்.

கிச்சா சுதீப்
இதுவரையிலும் இந்திய திரையுலகம் கண்டிராத ஒரு பிரமாண்டாமான படைப்பாக இப்படம் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறினார். பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம், 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது.

கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அஷோக் மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க : HBD சுதீப்... ஜலதரங்கன் பிறந்ததினம் இன்று

ABOUT THE AUTHOR

...view details