விக்ரம் நடித்து, கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கடாரம் கொண்டான்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல் பிறந்த நாளானறு வெளியிட்ட படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று படத்தின் ட்ரெய்லரை வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் நடிகை அக்சரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலுடைய அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை: விக்ரம் !
கமலின் '16 வயிதினிலே' படத்தில் இடம்பெற்றுள்ள சப்பாணி கதாபாத்திரத்திற்காகவே அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை உள்ளதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
vikram
இந்நிலையில், ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, வெளியிட்டு விழாவில் பேசிய விக்ரம், கமல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடைய படங்கள் அனைத்தையும் சிறு வயதிலிருந்தே எனக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வேன். குறிப்பாக அவருடைய படங்களில் '16 வயதினிலே' எனக்கு மிகவும் பிடித்த படம், அதில் அவர் நடித்த சப்பாணி கதாபாத்திற்காகவே அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. ஆனால் எனக்கு நன்றாக தெரியும் அது என்னால் முடியாது என்று. இவ்வாறு அவர் கூறினார்.