Vikram Update: பெரிய பட்ஜெட்டில் தயாராகும் 'விக்ரம்' படத்தினை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
கமலுடன், பகத் பாசில், விஜய் சேதுபதி என முக்கியமான நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனால் பட அறிவிப்பின்போதே இந்திய அளவில் பேசப்பட்டது.
தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு, மும்பை தாராவியில் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அங்கு படமாக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.