'இமைக்கா நொடிகள்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து 'கோப்ரா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் விக்ரம் ஏழு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முன்னதாக ஏழு கெட்டப்புகளில் விக்ரம் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.