தமிழ்நாடு

tamil nadu

'சியான் 60' அப்டேட் - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் 'மகான்'

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சியான் 60'  படத்திற்கு  'மகான்' என பெயரிடப்பட்டுள்ளது.

By

Published : Aug 20, 2021, 7:56 PM IST

Published : Aug 20, 2021, 7:56 PM IST

மகான்
மகான்

நடிகர் விக்ரம் தற்போது 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சியான் 60' படத்திலும் விக்ரம் நடித்துள்ளார்.

லலித் குமார் 7 கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளார் .மேலும் இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகான்
இதில் விக்ரம் கேங் ஸ்டராகவும், துருவ் விக்ரம் காவல் துறை அலுவலராகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.பெயரிடப்படாமல் விக்ரமின் 60வது படம் என்பதால் தற்காலிகமாக 'சியான் 60' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இப்படத்திற்கு 'மகான்' என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்தான டைட்டில் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details