சேதுபதி பட புகழ் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் சிந்துபாத். இதில் நடிகை அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடிப் போட்டு நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லிங்கா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் இசை விருந்து - இசை
அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் நாளை மாலை வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு போட்டியாக இப்படம் மே-16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சோகமடைந்தனர்
இந்நிலையில், இப்படத்தின் ‘ராக்ஸ்டார் ராப்பர்’ எனும் பாடலின் சிங்கிள் டிராக் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முன்னதாக, யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான விஜய் சேதுபதியின் தர்மதுரை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதனால் மீண்டும் சிந்துபாத்தில் இணைந்திருக்கும் விஜய் சேதுபதி-யுவன் காம்போ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.