தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எவ்ளோ பிஸினாலும் படம் வந்துட்டேதான் இருக்கும்போல - விசேவின் அடுத்த பட அப்டேட் - Actor vijay sethupathi

தமிழ் சினிமாவின் பிஸியான கதாநாயகராக வலம்வரும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

vijay sethupathi

By

Published : Oct 31, 2019, 6:54 PM IST

தமிழ் சினிமாவில் நாயகர்களின் நண்பர் உள்ளிட்ட சின்னஞ்சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் விஜய் சேதுபதி, ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். அதன்பின் ’சுந்தரபாண்டியன்’ படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கிய விஜய் சேதுபதி பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடிப்பில் கலக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

அதன்பின் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, வருடத்திற்கு குறைந்தது ஐந்து படங்கள் என்று தொடர்ச்சியாக நடித்துவருகிறார். மேலும் பல திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றும் அவர், தெலுங்கு, மலையாள திரையுலகிலும் தடம்பதித்துள்ளார்.

முன்னதாக மாதவனுடன் ’விக்ரம் வேதா’, ரஜினியுடன் ’பேட்ட’ ஆகிய படங்களில் வில்லன் ரோல் ஏற்ற விஜய் சேதுபதி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 64ஆவது திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இதனிடையே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகவும் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி விஜய் சேதுபதி வீட்டிற்கே செல்ல முடியாத அளவிற்கு பிஸியாக படங்களில் நடித்துவரும் நிலையில், அவருடைய அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்குகிறார். மேலும் இதில் இயக்குநர் மகிழ் திருமேனி, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இத்திரைப்படத்தை எசக்கி துரை தயாரிக்கிறார்.

வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details