தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பேய் இருக்க பயமேன்' - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி - பேய் இருக்க பயமேன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

குழந்தைகளைப் பெரிதும் கவரும் விதமாக, ஒரு மணி நேரத்துக்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பேய் இருக்க பயமேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

vijay sethupathi unveiled 1st look of Pei irukka bayamen
Pei irukka bayamen movie

By

Published : Mar 10, 2020, 8:33 PM IST

சென்னை: ப்ளாக் காமெடி பாணியில் உருவாகியிருக்கும் 'பேய் இருக்க பயமேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் 'பேய் இருக்க பயமேன்'. படம் பற்றி இயக்குநர் கூறியதாவது: 'பேய் இருக்க பயமேன் படத்தில் கதாநாயகனாக நானே நடித்துள்ளேன். கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது.

Pei irukka bayamen movie

பேயைப் பார்த்து யாரும் பயப்படக் கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம் என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த 'பேய் இருக்க பயமேன்'.

Pei irukka bayamen movie

குழந்தைகளை பெரிதும் கவரும் விதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. இந்தப் படத்துக்கு ஒலி வடிவமைப்பாளராக பாய்ஸ், ராவணன், மங்காத்தா, காஞ்சனா போன்ற வெற்றிப் படங்களில் பணியாற்றிய சி.சேது பணியாற்றியுள்ளார்.

Pei irukka bayamen movie

படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மூணாறு மற்றும் மறையூர் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி ட்வீட்டை தலைப்பாக பதிவு செய்யக் கோரிய 'தமிழ்ப்படம்' இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details