தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முரளி சொன்ன அந்த வார்த்தை.... சொக்கிப்போன மக்கள் செல்வன்! - தார் மோஷன் பிக்சர்ஸ்

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

முரளி -விஜய் சேதுபதி

By

Published : Jul 24, 2019, 9:19 PM IST

இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. முன்னதாக முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் ”தார் மோஷன்” பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. விஜய் சேதுபதி முதன்முறையாக பயோபிக் படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

முரளிதரன்

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில் ”மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும், காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறோம். இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்லவிருக்கிறோம். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது” என தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி

மேலும் இது தொடர்பாக லெஜெண்ட் முத்தையா முரளிதரன் கூறுகையில், ”இப்படத்தை 2020ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை பெரும் கௌரவமாக கருதுகிறேன். நான் இந்த படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றிவருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன்” என்றார்.

இதன்பின்னர், விஜய் சேதுபதி பேசுகையில், ”முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையை கூறும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப்போகிறது. இந்த சவாலை நான் ஆவலோடு எதிர்கொள்ள காத்திருக்கிறேன். முரளி எங்களுடன் இப்படத்தில் பணியாற்றுவார். அவர் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களைப் பற்றி அறிவுரை வழங்குவார் என்பதை அறிந்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், முரளிதரனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details