பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப். 25) பிற்பகல் சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி.க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல்போனது. அந்தவகையில் ஜெய்பூரில் படப்பிடிப்புக்காக சென்ற விஜய் சேதுபதியாலும் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.