தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மக்கள் செல்வனுடன் மீண்டும் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்! - இமைக்கா நொடிகள்

விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதிய படம் தொடங்கப்பட இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay Sethupathi
Vijay Sethupathi

By

Published : Jan 29, 2020, 3:22 PM IST

விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 'நானும் ரௌடி தான்'.

இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றதோடு, விஜய்சேதுபதி, நயன்தாரா காம்பினேஷன் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி - விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதிய படம் தொடங்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக 'சங்கத் தமிழன்', நயன்தாரா நடிப்பில் 'தர்பார்', விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

'மறக்கமுடியாத அனுபவத்தை அளித்த பியர் கிரில்ஸ்க்கு நன்றி' - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details