சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி தமிழன்னு தெரியும்...ஆனா அவர் 'சங்கத் தமிழன்'னு தெரியுமா...! - சங்கத் தமிழன்
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுடன் நகைச்சுவை நடிகர் சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்துக்கு 'சங்கத் தமிழன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.