காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இயங்கி வருகின்ற கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்தில் பணியாற்றுபவர் பச்சையம்மா. இவர் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார்.
நன்கொடையாக கார் வழங்கிய விஜய் சேதுபதி!
கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்துக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி
அப்போது அவரிடம் தங்களது கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்தை பற்றி பச்சையம்மா கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களது அலுவலகக் கட்டடப் பணிக்காக ஐந்து லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி.
மேலும் கொத்தடிமைத் தொழிலாளர் மீட்புப் பணிக்கு பயன்படும் வகையில் கார் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரது இச்செயலுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.