நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தில் நாயகியாக நடிகை டாப்ஸி நடித்து வருகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையிலும் விறுவிறுப்பாக நடைபெறும் விஜய் சேதுபதி பட ஷூட்டிங்! - Vijay sethupathi latest movies
நடிகை டாப்ஸி, விஜய் சேதுபதி நடித்து வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ராதிகா. மதுமீதா ஆகியோருடன் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், வெளியூரில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமைகூட ஓய்வில்லாமல் நடைபெறுகிறது என்று கூறி, நடிகை ராதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ராஜா போல காட்சியளிக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.