தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீபாவளி தினத்தில் தளபதியின் இரட்டை விருந்து! - தெலுங்கு டைட்டில்,

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

telugu whistle

By

Published : Oct 6, 2019, 10:23 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்திருக்கும் படம் 'பிகில்'. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, இந்துஜா உள்ளிட்ட பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டீசரோ, ட்ரெய்லர் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் கோபமடைந்து டீசரே வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். படக்குழுவினரும் கோபப்பட வேண்டாம், எல்லாம் உங்களுக்குதான் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மெர்சல், தெறி, படங்களைப் போன்று பிகில் திரைப்படமும் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கிலும் தீபாவளியன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பதுபோன்று தெலுங்கிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

எனவே, பிகில் படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் பிகில் தெலுங்கில் 'விசில்' என பெயரிட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு விஜய் இடம்பெற்றுள்ளனர். மைதானத்தில் பெண்கள் விளையாட போவது போன்றும் இடம்பிடித்துள்ளது.

தீபாவளியன்று நடிகர் விஜய் இரட்டை விருந்து தர இருப்பதால் இரண்டு மொழிகளிலும் இப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் முதல் இடம் பிடிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:

யோகி பாபுவை இயக்க காத்திருக்கும் பிரபல நடிகர்!

ABOUT THE AUTHOR

...view details