இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் இப்படம் வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதை விளம்பரம் செய்யும்விதமாக ட்விட்டர் நிறுவனம் படத்தின் சிறப்பு எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் #MASTERFILM, #மாஸ்டர் என்ற இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டாக்கிவருகின்றனர்.