தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யின் 'பீஸ்ட்' - ஆகஸ்ட்டில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு! - பீஸ்ட் திரைப்படம்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

beast
beast

By

Published : Jul 28, 2021, 4:02 PM IST

'டாக்டர்' படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து புதியப் படத்தை இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப் படத்திற்குத் தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் படத்திற்கு 'பீஸ்ட்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

'பீஸ்ட்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கியது. அப்போது விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம்(ஆகஸ்ட்) சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தளபதியின் பீஸ்ட்: என்ன சொல்கிறது ஃபர்ஸ்ட் லுக்?

ABOUT THE AUTHOR

...view details