தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யின் 'பீஸ்ட்': படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - பீஸ்ட்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

beast
beast

By

Published : Aug 7, 2021, 7:49 PM IST

இயக்குநர் நெல்சன் தற்போது விஜயை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இப்படத்தில் விஜய் - பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

'பீஸ்ட்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. அதில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோரின் காட்சிகள், பாடல்கள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ரிசார்ட்டில் தொடங்கியுள்ளது. அதில், படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிறகு ரஷ்யா செல்ல படக்குழுத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க: ஹாட் பீஸ்ட்' மோடில் பூஜா ஹெக்டே: இது வேறலெவல் போட்டோஸ்

ABOUT THE AUTHOR

...view details