நடிகை மீரா மிதுன்கடந்த சில நாட்களுக்கு முன்புநடிகர்விஜய், அவரது மனைவி ஆகியோரைக் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களைத் தெரிவித்து காணொலி வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மீரா மிதுன் மீது புகார் கொடுத்த விஜய் ரசிகர்கள்! - மீரா மிதுன்
நடிகர் விஜயையும், அவரது மனைவியையும் சமூக வலைதளங்களில் தவறாகப் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள்
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம், மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷிடம் மனு அளித்துள்ளனர்.
முன்னதாக நடிகை ஜோதிகா குறித்தும் மீரா மிதுன் தவறாகப் பேசி காணொலி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.