தமிழ் சினிமாவில் ரஜினியைத் தொடர்ந்து அடுத்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் கோலோச்சிவருகிறார். தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் இவர்தான் நம்பர் ஒன். தெறி, மெர்சல் பட வெற்றியைத்தொடர்ந்து அட்லீ-விஜய் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
#விஜய்யின் வெறித்தனம் - மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள் - விஜய் 63
விஜய்யின் மீது வெறித்தனமாக பாசம் வைத்துள்ள ரசிகர்கள் 'விஜய் 63' படத்தின் புதிய போஸ்டரை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் விஜய் 63 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் யோகி பாபு, கதிர் விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், பெயரிடப்படாத விஜய் 63 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது விஜய்யின் புகைப்படம் அல்லது போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவர். விஜய் 63 படத்திற்கு எந்த பெயரை வைக்கலாம் என்று படக்குழுவினர் தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில், ரசிகர்கள் விஜய்யின் 'வெறித்தனம்' என்ற பெயரில் போஸ்டரை வலைதளத்தில் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர்.
அதில், விஜய் ஒரு மைதானத்தில் கால்பந்தை உதைப்பது போன்று வெறித்தனமாக கிரியேட் செய்துள்ளனர். தற்போது இந்த போஸ்டரை #விஜயின்வெறித்தனம் என்ற ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கிவருகின்றனர்.