’பிகில்’ பட போஸ்டர் ஒன்றில் இறைச்சி வெட்டும் முட்டி(கட்டை) மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற ஸ்டில் வெளியிடப்பட்டது. இதனைக் கண்ட கறிக்கடை, மீன் கடைத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை அவமதிப்பதாகக் கூறி போஸ்டரை நீக்க வேண்டும் என கறிக்கடை உரிமையாளர் கோபால் என்பவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள்,கறிக்கடை உரிமையாளர்களுக்கு இறைச்சி வெட்டும் கட்டைகளை வழங்கி அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
இதுகுறித்து கறிக்கடை உரிமையாளர்களிடம் பேசிய விஜய் ரசிகர்கள், எங்கள் தளபதி யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பாதவர். அவர் கட்டை மீது கால் வைத்திருப்பதற்கான காரணம், படம் வெளியான பிறகுதான் தெரியும் எனக் கூறியுள்ளனர்.