தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார், என்ன உடையணிந்து வருவார் என்று தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் விஜய் தற்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.
கருப்பு நிற கோட் சூட் அணிந்து மிகவும் மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். பொதுவாக விஜய் தனது இசைவெளியீட்டு விழாவுக்கு மிகவும் சிம்பிளாக வருவார். ஆனால் இம்முறை மிகவும் மாஸாக வந்திருப்பதால், கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் எண்ட்ரி கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.
இதையும் படிங்க:'தருதல கதறுனா' பாடல் பெயரை மாற்றிய மாஸ்டர் படக்குழு!