'கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘தளபதி 64’. இதில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஷ், சாந்தனு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
'ஆடை' இயக்குநருக்கு மிமிக்ரி செய்து வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்!
இயக்குநர் லோகஷ் கனகராஜ் குரலில் விஜய் மிமிக்ரி செய்து இயக்குநர் ரத்னகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகாரஜுடன் நண்பரும் இயக்குநருமான ரத்னகுமாரும் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்மான நிகழ்வு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், பயணத்தாலும் மக்களை சந்திப்பதாலும் டெல்லியில் கதை குறித்த பணிகளில் இன்று ஈடுபடவில்லை. ஆனால் இது நடந்தது. மச்சி ஹேப்பி பர்த்டேடா. இப்படி விஜய், லோகஷ் கனகராஜ் குரலில் மிமிக்கிரி செய்து வாழ்த்தினார். இந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கை தான். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.