கோவாவில் நடைபெற உள்ள 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
தமிழில் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனனின் 'ஹவுஸ் ஓனர்' ஆகிய திரைப்படங்களைத் திரையிட உள்ளனர். அதேபோல், மலையாளத்தில், 'உயரே', 'ஜல்லிக்கட்டு', 'கோலாம்பி', உள்ளிட்ட திரைப்படங்களும் இந்தியில் 'உரி', 'கல்லிபாய்', 'சூப்பர் 30' உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.