பின்னணி பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளப் பக்கங்களில் இரங்கல் செய்தி பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் ஆன்டனி தான் நடித்து வரும், 14ஆவது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எஸ்.பி.பியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.
எஸ்.பி.பிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜய் ஆன்டனி! - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம்
சென்னை: படப்பிடிப்பில் இருக்கும் விஜய் ஆன்டனி மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
விஜய் விஜய் ஆன்டனி
இதேபோல் நேற்று (செப்.26) ஜெய்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு ஜெய்பூரில் அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி!