'ஆள்', 'மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
இந்தப் படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா, தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போதைய சூழலுக்கேற்றவாறு அரசியலை மையப்படுத்தி உருவாகும் இந்த த்ரில்லர் கதைக்கு ஜோகன் இசையமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் இறுதிகட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'கோடியில் ஒருவன்' பட ட்ரெய்லரில், விஜய் ஆண்டனிக்கும் அரசியல்வாதிக்கும் ரவுடிக்கும் இடையை நடக்கும் கலவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சேரிபகுதிகளில் வசிக்கும் மக்களின் குழந்தைகளுக்கு அங்கிருக்கும் ரவுடிகள் படிக்க விடமால் தொல்லை செய்யவே, விஜய் ஆண்டனி அவர்களுக்கு உதவும் முயற்சிகள் மேற்கொள்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.