தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எப்படி இருக்கும் ரஜினி - விக்னேஷ் காம்போ! - super star

நீங்கள் திரைத்துறைக்கு வர காரணம் என்ன என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என விக்னேஷ் பதிலளித்தார். அதேபோல் பிடித்த நடிகர் யாரென்ற கேள்விக்கும் ரஜினி என்ற பெயரையே குறிப்பிட்டார்.

rajinikanth vignesh shivan
rajinikanth vignesh shivan

By

Published : Jun 29, 2021, 4:26 PM IST

Updated : Jun 29, 2021, 11:02 PM IST

சென்னை: ரஜினியை வைத்து ஜாலியான ஒரு படம் பண்ண ஆசை என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் விக்னேஷ் சிவன், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களோடு உரையாடி வருகிறார். சமீபத்திய இன்ஸ்டா உரையாடலில் அவர் ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

நீங்கள் திரைத்துறைக்கு வர காரணம் என்ன என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என விக்னேஷ் பதிலளித்தார். அதேபோல் பிடித்த நடிகர் யாரென்ற கேள்விக்கும் ரஜினி என்ற பெயரையே குறிப்பிட்டார். அப்போது ஒருவர், ரஜினியுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், உங்களிடம் இருந்து என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கலாம் என்ற கேள்வி முன்வைத்தார்.

எப்படி இருக்கும் ரஜினி - விக்னேஷ் காம்போ!

அதற்கு விக்னேஷ் சிவன், ஜாலியான பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படத்தைதான் எடுப்பேன் என தெரிவித்துள்ளார். ரஜினி - விக்னேஷ் கூட்டணியில் படம் அமையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் ‘ரெண்டு காதல்’ என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டாவது பாடல் ஜூலை மாதம் வெளியாகும் என விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள்...’ - LGBTQ சமூகத்தினருக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி ட்வீட்

Last Updated : Jun 29, 2021, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details