நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் சமீப காலமாகக் கோயில்களுக்குச் சென்று வருகின்றனர். அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.
அந்தவகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்றுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். சபரிமலையில் செய்யும் பிரார்த்தனை மற்றும் நல்ல நினைவுகள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.