தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வலிமை' படக்குழுவைப் பாராட்டி விக்னேஷ் சிவன் ட்வீட்! - அஜித்தை புகழ்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன்

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்தின் படக்குழுவுக்குப் பாராட்டுகள் தெரிவித்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்.

'வலிமை' படக்குழுவை பாராட்டி விக்னேஷ் சிவன் ட்விட்!
'வலிமை' படக்குழுவை பாராட்டி விக்னேஷ் சிவன் ட்விட்!

By

Published : Feb 25, 2022, 6:39 PM IST

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் நேற்றைய (பிப்ரவரி 25) தினம் வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த தனது கருத்துகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "சமூகப் பொறுப்புடன்கூடிய இயக்குநரும், முன்மாதிரியான நடிகரும் இணைந்து பிரமாண்டமான காட்சிகளுடன் முக்கியமான கருத்துகளையும் சொல்லியிருக்கின்றனர். இதுவரை பார்த்திராத சண்டைக் காட்சிகள், உண்மையான சண்டைக் காட்சிகள், ஒவ்வொரு காட்சியிலும் கடின உழைப்பு ஆகியவை ரசிகர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.

நாம் மறந்த அடிப்படை விஷயங்கள், நம் மதிப்புகள் ஆகியவை படத்தின் அடிப்படையான விஷயம். அது மக்களுக்கு நன்றாகச் சென்று சேர்ந்திருக்கிறது. பொறுப்புணர்வுடன்கூடிய உயர்தரமான சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்தை வழங்கியதற்காகப் படக்குழுவினருக்குப் பாராட்டுகள். நடிகர் அஜித், வினோத், போனி கபூர், யுவன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'வலிமை' முதல் நாள் வசூல் - ரஜினியை முந்திய அஜித்!

ABOUT THE AUTHOR

...view details