'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்கிய முதல் படமே 100 கோடி வசூல், பிரமாண்ட வெற்றி பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றியை ஈட்டித்தந்தது. விஜய் ஒரே மாதிரியான கதைகளத்தில் நடித்துவந்த நிலையில் இப்படம் நல்ல பிரேக் கொடுத்தது.
இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் விஜய்யை வேறுவிதமாக ரசிக்க வைத்தன. 'தெறி' வெற்றிக்குப் பிறகு விஜய் -அட்லி வெற்றிக் கூட்டணியுடன் 'மெர்சல்' படம் வெளியானது. இப்படம் வெளியான முதல்நாளே கடும் விமர்சனத்தை சந்தித்தது. ஜிஎஸ்டி குறித்த காட்சிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. விஜய்யை வைத்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 'பிகில்' படத்தை இயக்கி முடித்துள்ளார் அட்லி.