தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இது எந்த இடம்? ஒத்த ஆளாக கெத்து காட்டிய அஜித்.. ரசிகர்கள் கொண்டாட்டம்! - Video of actor Ajith's tour

நடிகர் அஜித் குமாரின் சுற்றுப்பயணத்தின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

video-of-actor-ajiths-tour
video-of-actor-ajiths-tour

By

Published : Oct 28, 2021, 11:21 AM IST

சென்னை :வலிமை படத்தை முடித்த கையோடு பைக் ரைடை மேற்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

சமீபத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் அஜித் குமார் கையில் தேசிய கொடியுடன், இராணுவ வீரர்களுடன் நின்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இரு தினங்களுக்கு முன்பு நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற அஜித், தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியானது. இதில், பைக்கில் நிழலில் சாய்ந்தவாறு அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தார். (இந்தக் காட்சி ஒருகணம் அமர்களம் படத்தில் வரும் மகா கணபதி பாடலை நினைவு கூரும் வகையில் இருந்தது.)

பைக்கின் நிழலில் சாய்ந்தவாறு அஜித் குமார்

இதையடுத்து அனைவரும் வியந்து பார்க்கும் வகையில், ஒரு மலை முகட்டிடன் விளிம்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கம் போல் தில்லாக நிற்கும் தல எனக் கொண்டாடினர்.

மலை முகட்டிடன் விளிம்பில் அஜித் குமார்

இந்நிலையில், தற்போது அஜித் குமார் தனது பைக்கில் முட்புதர்களுக்கு இடையே மாஸாக பைக் ஓட்டி வரும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சுற்றுப்பயணத்தின் வீடியோ

இதையும் படிங்க : காற்று வெளியிடைக் கண்ணம்மா அதிதி ராவ்வுக்கு இன்று பிறந்தநாள்!

ABOUT THE AUTHOR

...view details