தமிழ்நாட்டில் 17ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய முழுவதும் திகைப்பூட்டும் அளவிற்கு பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வியப்புக்குரிய வெற்றிபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு சுனாமி வீசியுள்ளது. அந்த சுனாமியில் நனையாமல் உள்ள சில மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது திமுக, பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற கொள்கைவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்" என்றார்.
'திராவிட கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி..!' - வைரமுத்து - திமுக
சென்னை: "திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி, திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி" என்று, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
vairamuthu byte
மேலும் அவர், "இந்த வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி எனக் கொண்டாடலாம். ஆனால் வாக்குகள் வித்தியாசம் என்பது திமுக தலைவர் ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். திராவிட இயக்கங்கள் முன்னினும் வலிமையாக, முன்னினும் எழுச்சியாக, முன்னினும் இன்னும் கொள்கை பேசும் கூட்டமாக திகழ வேண்டிய காலத்தில் இப்போது இருக்கின்றோம். இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாட வேண்டும். இந்த வெற்றியை தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட கவசமாக நான் கருதுகிறேன்" என்றார்.
Last Updated : May 24, 2019, 5:07 PM IST