இயக்குநர்பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து தற்போது முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக உயர்ந்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், புதிதாக இலவச சினிமா பயிற்சி வகுப்பைத் தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ”தற்போது சினிமா பயிற்சி வகுப்புகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, திரைப் பண்பாடு ஆய்வகம் நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு முதுநிலை சினிமா பயிற்சி வகுப்பினைத் தொடங்கியுள்ளோம்.