தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பு பட தயாரிப்பாளர் படத்தில் வெற்றிமாறன் - சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா

’அசுரன்’ கொடுத்த வெற்றியால் குஷியில் இருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றவுள்ளார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமாருடன் இயக்குநர் வெற்றிமாறன்

By

Published : Oct 16, 2019, 7:11 PM IST

சென்னை: தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறனும், பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் முதல் முறையாக ஒன்றிணைந்துள்ளனர். அதன்படி ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன்.

சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, ஜீவா நடித்த கோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட். இதையடுத்து இந்த நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.

வெற்றிமாறன் அடுத்த படத்தை தயாரிக்கும் எல்ரெட் குமார்

இது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றிமாறன் போன்ற இயக்குநருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இதற்கு காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவரது படங்கள் வணிக வெற்றிக்குத் தேவையன அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத்தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது.

இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் கிரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.

வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details