’8 தோட்டாக்கள்’ படத்தில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் வெற்றி. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஷாம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரனிஷ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இதில் வித்யா, பிரதீப் விஸ்மியா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு இன்னும் பெயரிடாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.15) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்றுவட்டாரங்களில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் வெற்றியின் கதாபாத்திரம் இதுவரை அவர் ஏற்று நடிக்காத ஒன்றாக இருக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வெற்றிமாறன் தயாரிக்கும் படம் குறித்த புதிய அறிவிப்பு!