இயக்குநர் வெற்றிமாறன் 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். இதை விரைவில் முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.
வெற்றிமாறன் திரைக்கதையில் நடிக்கும் சசிகுமார்...! - வெற்றிமாறன் படங்கள்
சென்னை: நடிகர் சசிகுமார் வெற்றிமாறனின் திரைக்கதையில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை தற்போது வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். 'பெல்லாதவன்', 'ஆடுகளம்' படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் -கதிரேசன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
இப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் மதுரை, சென்னை பகுதிகளில் காட்சிபடுத்தப்படுகிறது. 'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக் உரிமையும் கதிரேசன் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.