தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘வெள்ளை யானை’ திரைப்படம்: தனியார் தொலைக்காட்சியில் இன்று ரிலீஸ் - புது திரைப்படம்

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் உருவான ‘வெள்ளை யானை’ திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் இன்று (ஜூலை 11) வெளியாகிறது.

வெள்ளை யானை
வெள்ளை யானை

By

Published : Jul 11, 2021, 8:55 AM IST

சென்னை:தயாரிப்பாளர் எஸ். வினோத் குமார் தயாரிப்பில் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இயக்கிய திரைப்படம் வெள்ளை யானை. இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ஆத்மியா, சரண்யா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ளார். விவசாயிகளின் தற்போதைய நிலைமையை காட்டும் படமாக இத்திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இத்திரப்படம் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இதையடுத்து, படத்தை வாங்கிய சன் நிறுவனம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட திட்டமிட்டது. அதன்படி ‘வெள்ளை யானை’ திரைப்படம் இன்று (ஜூலை 11) மதியம் 3 மணிக்கு தனியார் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க:இயக்குநர் மிஷ்கின் படத்தில் அதர்வா?

ABOUT THE AUTHOR

...view details