தெலுங்கில் மெகா ஹிட் அடித்த விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் இயக்குநர் பாலா வர்மா என்ற தலைப்பில் இயக்கினார். வர்மா படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுக கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தின் ட்ரையலரும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாக சிறிது நாட்களே உள்ள நிலையில், வர்மா திரைப்படம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
'வர்மா' படம் வெளியாகாது: இயக்குநர் பாலாவை நீக்கியது தயாரிப்பு நிறுவனம்! - வர்மா படம் வெளியாகாது
இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகவிருந்த வர்மா திரைப்படம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
வர்மா
தெலுங்கு படம் போல் விறுவிறுப்பாக இயக்க வில்லை, எதிர்பார்த்த இயக்கத்தில் பாலா படத்தை இயக்கி தரவில்லை. அதனால் பாலா படத்தில் இருந்து நீக்கப்படுகிறார். வேறு இயக்குநர் மற்றும் புதிய நடிகர்கள் வைத்து புதியதாக வர்மா படம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'வர்மா' படம் வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.