தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அடுத்து வரும் நபர் யாருனு தெரியல? - ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த வனிதா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை வனிதா இன்னும் என் வாழ்க்கையில் எத்தனை பேர் வருவார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

வனிதா
வனிதா

By

Published : Sep 9, 2021, 12:39 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, விஜய் நடிப்பில் வெளியான 'சந்திரலேகா' என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிறகு குக் வித் கோமாளி, BB ஜோடிகள் என மீண்டும் கம்-பேக் கொடுத்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை இவர் சந்தித்துள்ளார். அதனாலேயே அவரை சுற்றி எப்போதும், பல்வேறு சர்ச்சை கருத்துகள் சுற்றி வருகின்றனர்.

இவர் கென்னி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், "உங்கள் வாழ்க்கையில் அடுத்துவரும் நபரின் பெயர் S என்ற எழுத்தில் தொடங்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தாரே. அந்த நபர் யார்? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த வனிதா, "இன்னும் என் வாழ்க்கையில் எத்தனை பேர் வருவார்கள் என எனக்கே தெரியவில்லை. அப்படி இருக்கையில் உங்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது" என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details