தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Valimai Release Date Announced:'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - வலிமை திரைப்படத்துக்கு என்ன சான்றிதழ்

Valimai Release Date Announced:அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Valimai Release:
Valimai Release:

By

Published : Dec 31, 2021, 5:21 PM IST

Valimai Release Date Announced:ஹெச். வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். வலிமைக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து 'வலிமை' பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லர் நேற்றைய (டிசம்பர் 30) தினம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது.

முன்னதாக இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், இரண்டாவது சிங்கிள் சாங், விசில் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் 'வலிமை' திரைப்படம் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வலிமை ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:2021 Recap - நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்

ABOUT THE AUTHOR

...view details