தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வலிமையின் புதிய அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்! - valimai update

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் புதிய ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது

valimai-stills-and-picture-goes-viral
valimai-stills-and-picture-goes-viral

By

Published : Oct 6, 2021, 1:46 PM IST

சென்னை :ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் (கணநேரக் கண்ணோட்டம்) வீடியோ வெளியானது. வீடியோவில் அஜித் ஸ்டைலாக மாஸ் லுக்கில் காணப்பட்டார். மேலும் வீடியோவில் அஜித் பேசிய ”கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” போன்ற வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. 'நாங்க வேற மாறி' என்ற பர்ஸ்ட் சிங்கிளும் முன்பாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் புதிய ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க : பிக்பாசில் வெடித்தது மோதல் - இமான் அண்ணாச்சி தான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details