அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியான திரைப்படம் 'வலிமை'. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருப்பதுதான், அதிக அளவில் நெகட்டிவாக விமர்சிக்கப்படுகிறது.
நீளத்தைக் குறைத்திருந்தால் திரைப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனப் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து 2 மணி நேரம் 58 நிமிடங்களாக இருந்த 'வலிமை' திரைப்படத்தின் கால அளவில் 14 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.