தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வலிமை' ரிலீஸ் தேதி வெளியீடு? - valimai update

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வலிமை' ரிலீஸ் தேதி வெளியீடு?
'வலிமை' ரிலீஸ் தேதி வெளியீடு?

By

Published : Feb 1, 2022, 8:06 PM IST

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள திரைப்படம் "வலிமை". போனி கபூர் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிங்கிள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

அனைத்து இறுதி கட்ட வேலைகளும் நிறைவடைந்த நிலையில், திரைப்படமானது இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையன்று வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசு விதித்த கரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டுத்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி 'வலிமை' திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்.' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details