தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' - சில மணி நேரங்களில் தீப்பிடித்ததுபோல் தீவிர வரவேற்பு! - Shankar Mahadevan

கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் பாடல் வெளியிட்டுள்ளார். இது வெளியான சில மணி நேரங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாட்படு தேறல்
நாட்படு தேறல்

By

Published : Apr 9, 2021, 6:43 AM IST

Updated : Apr 9, 2021, 9:46 AM IST

கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாட்டு உலகின் முதல் முயற்சி என்று பேசப்படுகிறது. 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களைக் கவிஞர் வைரமுத்து உருவாக்கிவருகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களைப்போல இது வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் பாட்டுத் தொடராகும். ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி இரண்டிலும் நாட்படு தேறல் ஒளிபரப்பாகிறது.

வைரமுத்துவின் 'நாட்படு தேறல்'

அதன் தலைப்புப் பாடலைக் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் தளங்களில் நேற்று வெளியிட்டார். வெளிட்ட சில மணி நேரங்களில் அது தீப்பிடித்ததுபோல் தீவிரமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நாட்படு தேறல்

நாட்படு தேறல் என்ற தலைப்பின் இலக்கியப் பாடலாக இது ஒலிக்கிறது. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையில், சங்கர் மகாதேவன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கார்த்திகேயன் திரையாக்கம் செய்திருக்கிறார்.

“இதிகாசத்தில் விழுந்த ரத்தம்

நாட்படு தேறல்

இலக்கியத்தில் வடிந்த கண்ணீர்

நாட்படு தேறல்

அமிழ்தில் ஊறிய ஆதித் தமிழும்

நாட்படு தேறல்”

என்ற வரிகளைத் தமிழ் ஆர்வலர்கள் ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.

Last Updated : Apr 9, 2021, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details