கரோனா பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த மே 31ஆம் தேதி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு இன்றுடன் (ஆகஸ்ட் 31) முடிகிறது. இதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நாளை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வர உள்ளன.
பறவைகளே பத்திரம்! கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை! - poet vairamuthu
ஊரடங்கு தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே! இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:'பொதுவுடைமை பூமிக்குப் புரியாதா?' - கேரள அரசுக்கு வைரமுத்து கேள்வி!