தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்' பாடலை இயக்கும் விக்ரம் சுகுமாரன் - இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை 'இராவண கோட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார்.

c
c

By

Published : Nov 13, 2021, 3:23 PM IST

இயக்குநர் மணி ரத்னத்தின் தயாரிப்பில் 'வானம் கொட்டட்டும்', விஜய்யின் 'மாஸ்டர்', 'முருங்கைக்காய் சிப்ஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு, தற்போது 'இராவண கோட்டம்' என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

கதிர், கலையரசன், ஓவியா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'மதயானைக் கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் 'இராவண கோட்டம்' படத்தை இயக்கியுள்ளார்.

'இராவண கோட்டம்' படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களை ‘நாட்படு தேறல்’ என்னும் பெயரில் கவிஞர் வைரமுத்து உருவாக்கியுள்ளார்.

இதில், ஒரு பாடலை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இது குறித்து விக்ரம் சுகுமாரன் கூறுகையில், "நாட்டுபடு தேறல் தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நன்றிகள். இது எனக்கு ஒரு பெருமிதமான தருணம்" என்றார்.

தொலைக்காட்சித் தொடர்களைப்போல இது வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் பாட்டுத் தொடராகும். ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி இரண்டிலும் நாட்படு தேறல் ஒளிபரப்பாகிறது.

இதையும் படிங்க: இராவண கோட்டம் படப்பிடிப்பு நிறைவு

ABOUT THE AUTHOR

...view details